இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

நயன்தாரா நடித்த 'அறம்' படம் மூலம் கவனிக்க வைத்தவர் கோபி நயினார். அந்த படம் வெற்றிப் படமாக அமைந்தபோதும் அடுத்த வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் இயக்கி வரும் படம் 'மனுஷி'. இந்த படத்தை இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கிறார்.
படம் பற்றி கோபி நயினார் கூறும்போது “ஜனநாயத்திற்காக குரல் கொடுக்கும் மனுஷியை படமாக்கி உள்ளேன். இந்த படத்தை எந்த தயாரிப்பாளரும் தயாரிக்க முன்வராதபோது கதையை கேட்டுவிட்டு வெற்றி மாறன் தயாரிக்க முன்வந்தார். அவர் லாபத்தை பார்க்கவில்லை. படம் சொல்லும் விஷயத்தை மதித்து தயாரிக்க முன்வந்தார்.
இந்த கதைக்கு ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்களை முதலில் அணுகினேன். பல்வேறு காரணங்களால் இவர்களால் நடிக்க முடியவில்லை. பின்புதான் ஆண்ட்ரியா நடிக்க முன்வந்தார். டிரைலரில் போலீஸ் ஸ்டேஷனில் ஆண்ட்ரியா உட்காரும் காட்சியை பலரும் இன்றைக்கு பாராட்டுகிறார்கள். இந்தக் காட்சியில் ஒரு நாளுக்கு மேல் நடிக்க மாட்டார் என்று நினைத்தேன். என் எண்ணத்தைப் பொய்யாக்கி 9 நாட்கள் அப்படி உட்கார்ந்தபடியே நடித்து கொடுத்தார். ஸ்டூல் மேல் உட்காருங்கள். நான் எடிட்டிங்கில் சரி செய்து கொள்கிறேன் என்று சொல்லியும் கேட்காமல் நடித்துக் கொடுத்தார். ஆண்ட்ரியாவுக்கு இந்த படம் அவரது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்றார்.