Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சலி கிடைத்ததால், பார்ட்டி வைத்து கொண்டாடிய ஜெய்!

21 ஏப், 2013 - 12:15 IST
எழுத்தின் அளவு:

ஒரு வாரமாக அஞ்சலி மாயமாகி விட்டதால், அவருடன் நடித்த சில நடிகர்களையும் விட்டுவைக்கவில்லை போலீசார். குறிப்பாக ஜெய்யிடம் பல கோணங்களில் விசாரணை நடத்தி காய்ச்சி எடுத்து விட்டார்களாம். குறிப்பாக, ஜெய் மீது எந்த சந்தேகமும் இல்லை என்று அஞ்சலியின் சித்தி பாரதிதேவி கொடுத்த ஸ்டேட்மென்ட் காரணமாகத்தான், அப்படின்னா இதுக்குள் ஏதோ சமாச்சாரம் இருக்கு என்று ஜெய் மீது விசாரணையை திருப்பினார்களாம். இதனால் எங்கிருந்தாலும் அஞ்சலி வந்து விடவேண்டும் என்று வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாராம் ஜெய்.

இப்படியாக ஒருவாரம் அவர் விரதமிருந்து கொண்டிருக்க, ஒருவழியாக ஐதராபாத் போலீசில் ஆஜரானார் அஞ்சலி. அதன்பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார் ஜெய். அதோடு, ஒரு வாரமாக ஒருவேளை, இந்த அஞ்சலி நீண்டநாள் ஜர்க் கொடுத்து விட்டால், அனைவரது சந்தேகமும் நம்மீது திரும்பிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தவர், அவர் வந்த சந்தோசத்தை பெருசாக கொண்டாடி மனசை ரிலாக்ஸ் பண்ண வேண்டுமென்று ஈசிஆர் சாலைக்கு நண்பர்களுடன் சென்றாராம். அங்கே ஒருநாள் பகலில் ஆரம்பித்த பார்ட்டி நள்ளிரவுக்கு பிறகும் தொடர்ந்ததாம்.

அதன்பிறகு அனைவரும் காரை ஓட்டிக்கொண்டு சிட்டிக்குள் வந்திருக்கிறார்கள். ஆனால் சந்தோச களிப்பில் இருந்த நடிகர் எக்குத்தப்பாக காரை ஓட்டிச்செல்ல ஒரு இடத்தில் காரை உரசி விட்டாராம். நல்லவேளை எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லையாம். அதோடு, பார்ட்டி கொண்டாட்டத்தை இத்தோடு நிறுத்திக்குவோம் என்று சின்சியராக காரை ஓட்டியபடி வீடு வந்து சேர்ந்தாராம் நடிகர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
22 ஏப், 2013 - 17:31 Report Abuse
Angry ஜெய் குடிச்சுட்டு வண்டி ஓட்டினான் என பத்திரிக்கையிலே வந்திருச்சே , காவல் துறை தன் கடமையை செய்ய இன்னும் கிளம்பலையா ??
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
26 ஏப், 2013 - 19:40Report Abuse
சு கனகராஜ் எதுக்கெல்லாம் பார்டி என்று ஒரு விவஸ்தை இல்லையா...
Rate this:
rajaraja chozhan - madurai,இந்தியா
22 ஏப், 2013 - 00:07 Report Abuse
rajaraja chozhan குழந்தைகளை, இளஞ்சர்கள் தம் படிப்பிலும், வியாபாரத்திலும் கவனம் செலுத்துங்கள். சினிமா ஒரு பொழுதுபோக்கு என எண்ணுங்கள். ஐரோப்பாவில் சினிமா ஒரு பொழுதுபோக்கு, அதனால் அவர்கள் அறிவியலில் மற்றும் பணத்தில் வுயர்ந்து வுள்ளனர். எப்ப பார்த்தாலும் சினிமா என்று.....
Rate this:
Begam - Coimbatore,இந்தியா
21 ஏப், 2013 - 14:45 Report Abuse
Begam கோடி கோடியா பணம் கிடைக்கும் வரை இந்த கேடிகளின் ஆட்டம் தொடரும். சினிமா பார்ப்பதை தயவு செய்து எல்லோரும் நிறுத்துங்கள்.
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
21 ஏப், 2013 - 14:24 Report Abuse
kumaresan.m " இதை எப்படி எடுத்து கொள்வது ....என்று தெரியவில்லை அஞ்சலி கிடைத்த சந்தோசமா ?அல்லது துக்கமா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in