இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
சரித்திர புருஷர்களின் வாழ்க்கையை படமாக்குவது ஒரு மினிமம் கியாரண்டி என்கிற டிரண்டிங் இப்போது உள்ளது. அந்த வரிசையில் ஏற்கெனவே வடமாநிலத்தில் ஜான்சி ராணி, அக்பர், பிரித்விராஜ் உள்ளிட்ட பலரது வாழ்க்கை படங்கள் வந்துள்ளன. சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் சினிமா ஆகியுள்ளது. இந்த நிலையில் சிவாஜி நிறுவிய இந்து சாம்ராஜ்யத்தை கட்டிக்காப்பாற்றிய அவரது மகன் சாம்பாஜியின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது.
சாம்பாஜியின் வீரம், தியாகம், போர் தந்திரம் போன்ற விஷயங்களும், மனைவியுடன் அவருக்கு இருந்த காதலும் படத்தில் இடம்பெறுகிறது. சாம்பாஜி மகாராஜா கதாபாத்திரத்தில் விக்கி கவுசல் நடிக்கிறார். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சாம்பாஜி மகாராஜாவாக நடிக்கும் விக்கி கவுசல் தோற்றம் தற்போது வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.