மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
எம்.ஜி.ஆர் காலத்து நடிகையான ரேவதி, தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது சிறகடிக்க ஆசை தொடரில் முத்துவின் பாட்டியாக நடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்று வருகிறார். மூத்த நடிகையான இவர் நடிப்பதை தாண்டியும் டப்பிங் பேசுவதில் அதிக ஆர்வமுடையவர். இதற்காக அந்த காலத்திலேயே ரூ. 60,000 பணத்தை யூனியனில் உறுப்பினராக கட்டியிருக்கிறார். ஆனால், டப்பிங் யூனியனிலிருந்து யாருமே அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. கட்டிய பணமும் வீணாகிவிட்டது. இந்த சம்பவம் குறித்த தகவலை அண்மையில் அவர் அளித்த பேட்டியில் மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.