இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இதில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரி க ம ப. பல சாமானிய மக்களின் கனவை நனவாக்கி அவர்களின் இசை திறமையை உலகறிய செய்யும் மேடையாக இந்தநிகழ்ச்சி இருந்து வருகிறது.
ராக்ஸ்டார் ரமணியம்மா, வாவ் கார்த்திக், புருஷோத்தமன், நாகர்ஜுன், லக்ஷ்னா, அசானி, பிரியன் என பல பேரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்ச்சியாக இந்த சரிகமப அமைந்துள்ளது.
வரும் ஏப்ரல் 27 முதல் சரி க ம ப நிகழ்ச்சியின் நான்காவது சீசன்மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனுக்காக தொடர்ச்சியாக 75 நாட்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக ஆடிஷன் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 12,000 பேர் ஆடிஷனில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் திறமையான 50 போட்டியாளர்கள் மெகா ஆடிஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, ஸ்வேதா மோகன், கே.எஸ்ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கே.எஸ் ரவிக்குமார் 49 படங்களை இயக்கிய அனுபவத்தை இந்த மேடையில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தமுறை இந்தியாவை தாண்டி மலேஷியா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்த் என பல நாடுகளில் இருந்து கலந்து கொண்டுள்ளனர்.
பெயிண்டர், ஓலை பின்னுபவர், போஸ்ட்உமன் என பல விதமான குடும்ப பின்புலங்களை கொண்டவர்கள் இந்த மெகா ஆடிஷனில் பங்கேற்றுள்ளனர். இதனால் இந்த சரி கம ப சீசன் 4 நிகழ்ச்சியும் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 27ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 7 மணிக்கு சரி க ம ப சீசன் 4 நிகழ்ச்சியை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணதவறாதீர்கள்.