இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'தி கோட்'. இப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றதைத் தொடர்ந்து சென்னையிலும் நடைபெற்று வருகிறது.
விஜய் கடந்த வாரம் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பியதும் நேராக ஓட்டுச்சாவடி சென்று லோக்சபா தேர்தலுக்கு ஓட்டளித்தார். அப்போது அவர் மிகவும் 'டல்' ஆகக் காணப்பட்டார். அவரது இடது கையிலும் காயம் காணப்பட்டது. அப்போதே அது குறித்து மீடியாக்களில் பேசப்பட்டது. ரஷ்யாவில் நடந்த சண்டைக் காட்சிகளின் போது விஜய்க்கு காயம் ஏற்பட்டது என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் நேற்று விஜய்யை 'கில்லி' படத் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம், இயக்குனர் தரணி, வினியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோர் சந்தித்து மாலை அணிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். அந்த புகைப்படங்களில் விஜய்யின் இடது கையில் காயம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
அதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் வெங்கட்பிரபுவை எக்ஸ் தளத்தில் 'டேக்' செய்து “என்னய்யா பண்ணிட்டிருக்க, இப்படி அடிபட வச்சிருக்க,” என தங்களது வருத்தங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.