அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார். 'ஜோமோண்டே சுவிஷேங்கள்' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான அவர் சகாவு, புளிமடா படங்களில் நடித்தார். தற்போது 'ஹெர்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுமானவர் பல வருடங்களுக்கு பிறகு 'கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி' படத்தின் மூலம் தெலுங்கிற்கு திரும்பினார். பிறகு மிஸ்மேட்ச், தக் ஜெகதீஷ், ரிபப்ளிக் படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் 'உத்தரகாண்டா' படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். இதில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக 'துர்கி' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள நடிகர் விஜய்பாபு, சைத்ரா ஜே. ஆச்சார், உமாஸ்ரீ, யோகராஜ் பட், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு அமித் திரிவேதி இசையமைக்கிறார். ரோஹித் பதகி இயக்குகிறார்.