நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவின் முன்னணி பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இளையராஜாவின் இசையில் அதிகமான பாடல்களை பாடி உள்ளதால் ஜானகியை இளையராஜாதான் அறிமுகப்படுத்தினார் என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எஸ்.ஜானகியை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியவர் தஞ்சை மாவட்டம் வேதாந்தபுரத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரங்கசாமி பார்த்தசாரதி என்ற ஆர்.பார்த்தசாரதி.
டி.எஸ்.பாலையா தயாரிப்பில் 1957ம் ஆண்டு வெளியான 'மகதலநாட்டு மேரி' படத்தில் பி.பி.ஸ்ரீனிவாசுடன் இணைந்து எஸ்.ஜானகி பாடினார். எஸ்.ஜானகிக்கு முதல் டூயட் பாடலும் இதுதான். “கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை தன் உருமாறி வந்து தேன் மாரி பெய்யுதே...” இந்தப் பாடல் மூலமே தமிழ்த் திரை உலகில் எஸ்.ஜானகி நுழைந்தார்.
பார்த்தசாரதி இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. ஆனாலும் அவருக்கு ஏனோ தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 12 வருடங்கள் இசை அமைப்பாளராக இருந்த அவர் 20 படங்கள்வரைதான் இசை அமைத்தார். அதன்பிறகு அமெரிக்காவுக்கு சென்று செட்டிலாகிவிட்டார். அங்கு ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் இன் என்ற இசை வெளியீட்டு நிறுவனத்தை தொடங்கி சிதார் ரவிசங்கர், வீணை எஸ்.பாலச்சந்தர், கே.ஜே.ஜேசுதாஸ் போன்ற கலைஞர்களது இசைவடிவங்களை ஒலிவடிவங்களாக வெளியிட்டார்.