நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஒரு விஜய் படம் வந்தால் பின்னாடியே ஒரு அஜித் படமும் வந்தாகணுமே… ஆமாம், வருகிறது 'மங்காத்தா'. இரு தினங்களுக்கு முன்பாக விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த 'கில்லி' படம் ரீ-ரிலீஸ் ஆகி வசூல் சாதனை புரிந்து வருகிறது. விஜய் ரசிகர்கள் மட்டும் ஒரு கொண்டாட்டத்தை நடத்திக் கொண்டிருக்க, அஜித் ரசிகர்களுக்குக் கோபம் வராதா ?. அவர்களும் ஒரு ரீ-ரிலீஸை வரவைக்க வேண்டும் என 'மங்காத்தா' பட ரீ-ரிலீஸுக்கு கோரிக்கை வைத்தார்கள்.
இப்போது அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி 'மங்காத்தா' படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, அஞ்சலி, மற்றும் பலர் நடிப்பில் 2011ல் வெளிவந்த படம் 'மங்காத்தா'. அஜித்திற்குப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்த படம். யுவனின் பின்னணி இசை இந்தப் படத்தின் மாஸ்டர் பீஸ்.
'மங்காத்தா' ரீ-ரிலீஸ் ஆனால் அது 'கில்லி' ரீ-ரிலீஸ் வசூலை முறியடிக்குமா என்பதற்கு இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.