நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த 2014 ஆம் ஆண்டு பிட்காயினில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 10 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று வெரிய பில்டெக் லிமிடெட் என்ற நிறுவனம் விளம்பரம் செய்தது. அதன் மூலமாக 6,600 கோடி ரூபாய் பொதுமக்களிடம் வசூலித்தார்கள். ஆனால் தாங்கள் சொன்னது போன்று பொதுமக்களுக்கு மாதம் தோறும் பத்து சதவீதம் வட்டி வழங்காமல் மக்களின் முதலீடையும் அந்த நிறுவனம் மோசடி செய்தது. இந்த பிட்காயின் மோசடியில் நடிகை ஷில்பா செட்டியும் அவரது கணவரான ராஜ் குந்த்ராவும் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இந்த வெரிய பில்டெக் நிறுவனத்தை நடத்தி வந்த ஏஜெண்டுகள் மீதும் மும்பை போலீசில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணையில் உக்ரைனில் பிட்காயின் மினி பார்ம் அமைக்க ராஜ் குந்த்ரா 285 பிட்காயின்களை அமித் பரத்வாஜ் என்ற ஏஜென்டிடம் இருந்து வாங்கியதாக தெரியவந்தது. அதன் மதிப்பு 150 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இந்த பிட்காயின் மோசடி வழக்கை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தி உள்ளது. அதனால் இந்த மோசடியின் பின்னணியில் இருக்கும் ராஜ் குந்த்ரா மற்றும் அவரது மனைவியான நடிகை ஷில்பா செட்டிக்கு சொந்தமான 97 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் முடக்கி உள்ளது. அதோடு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அமித் பரத்வாஜ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கும் அஜய் பரத்வாஜ், மகேந்திர பரத்வாஜ் உள்ளிட்டோரை அமலாக்கத்துறை தேடி வருகிறது.