இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில், வித்தியாசமான நடிப்பை வழங்கி வருபவர் நடிகர் பஹத் பாசில். குறிப்பாக கதாநாயகன், வில்லன் என எந்த கதாபாத்திரங்களில் நடித்தாலும் அதில் எவ்வளவு சீரியஸ் ஆக நடிக்கிறாரோ அதே அளவிற்கு நகைச்சுவை கலந்தும் நடித்து ரசிகர்களை வசியப்படுத்துவதில் வல்லவர்.
அந்த வகையில் சமீபத்தில் மலையாளத்தில் பஹத் பாஸில் நடித்த ஆவேசம் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ரங்கா என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பஹத் பாசில். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படமும் பஹத் பாசிலின் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆவேசம் படத்தை பார்த்துவிட்டு பஹத் பாசிலை வானளாவ புகழ்ந்துள்ளார். இது குறித்து சோசியல் மீடியாவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்ன ஒரே அற்புதமான படம். பஹத் பாசில்.. நீங்கள் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர். வித்தியாசமான எழுத்து, அதை படமாக்கிய விதம் அருமை.. மலையாள சினிமா எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிக் கொண்டு செல்கிறது. இயக்குனர் ஜித்து மாதவன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.