ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தரணி இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் வெளியான படம் 'கில்லி'.
தற்போதைய ரீ-ரிலீஸ் சீசனை முன்னிட்டு இப்படத்தையும் ஏப்ரல் 20ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்கள். அன்றைய தினம் சில இடங்களில் காலை 9 மணி சிறப்புக் காட்சிகளுடன் படம் வெளியாகிறது. அதற்கான முன்பதிவுகள் ஏறக்குறைய சிறப்பாக உள்ளதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நான்கு மாதங்களாகவே புதிய படங்கள் கொடுக்காத வசூலை இது போன்ற ரீ-ரிலீஸ் படங்கள்தான் கொடுக்கின்றன. அந்த வரிசையில் இந்த வாரம் வெளியாகும் 'கில்லி' அதிக வசூலைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மேல் ரீ-ரிலீஸ் படங்கள் அதிகம் வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அடுத்த வாரம் விஷால் நடித்துள்ள 'ரத்னம்', சுந்தர் சி நடித்துள்ள 'அரண்மனை 4' ஆகிய படங்கள் வருகின்றன. அதற்கடுத்து மே மாதம் முதல் பல புதிய படங்கள் வர உள்ளன. அதனால், ரீ-ரிலீஸ் படங்களின் வருகை வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.