இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண் கே.பிரசாத் இயக்கி உள்ள படம் அக்கரன். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கதை நாயகனாக நடித்துள்ளார். அவருடன் கபாலி விஸ்வந்த், வெண்பா, ஆகாஷ் பிரேம் குமார், நமோ நாராயணன், பிரியதர்ஷினி அருணாச்சலம், அன்னராஜ் கார்த்திகேயன், கார்த்திக் சந்திரசேகர், கண்ணன், மஹிமா உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் அறிமுக நிகழ்வில் படத்தில் நடித்திருப்பது பற்றி எம்.எஸ்.பாஸ்கர் பேசியதாவது : என் அக்கா மகன் மது என்னிடம் வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்க தான் லீட் கேரக்டர் செய்யனும் என்றார். சரிப்பா கதை கேட்கிறேன் என்றேன். 'பார்க்கிங்' மாதிரி நாயகனுக்கும் எனக்குமான கதையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கதை படு வில்லங்கமாக இருந்தது. இயக்குநரிடம் வேறு ஹீரோ நடிக்கலாமே என்றேன், ஆனால் அந்த வயது, நடிப்புக்கு நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் எனச் சொல்லிச் சம்மதிக்க வைத்தார்.
எல்லோருடைய முயற்சியால், மிக அழகாகக் கோர்த்து, இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். மகள்கள் என்றாலே நான் உருகிவிடுவேன், வெண்பாவும், பிரியதர்ஷினியும் என் மகள்களாக நடித்துள்ளார்கள். மண் புழு கூட மிதித்தால் திரும்பக் கடிக்க வரும் அது போல் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதை இந்த படம் என்றார்.