அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சென்னை வேல்ஸ் பல்கலைகழகத்தின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 4555 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மாணவர்கள் தவிர கலை, இலக்கியம், விளையாட்டு உட்பட பல துறைகளைச் சார்ந்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கலைத் துறையில் இருந்து நடிகர் ராம் சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
மகன் டாக்டர் பட்டம் பெற்றது குறித்து தெலுங்கு சினிமாவின் மூத்த முன்னணி நடிகரும், ராம் சரணின் தந்தையுமான சிரஞ்சீவி தனது எக்ஸ் தள பக்கத்தில், “தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான வேல்ஸ் பல்கலைக்கழகம் ராம் சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருப்பது எனக்கு ஒரு தந்தையாக பெருமையடைய வைக்கிறது. மகன்கள் இப்படியான சாதனைகளை நிகழ்த்தும்போதுதான் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். லவ் யூ மை டியர் டாக்டர் ராம் சரண்” எனப் பதிவிட்டுள்ளார்.