500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்', சுருக்கமாக கோட். மோகன், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சென்னை, ஐதராபாத், புதுச்சேரி, கேரளா என பல்வேறு ஊர்களில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது துபாயில் படப்பிடிப்பு நடக்கிறது. அடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்கிறது. இதோடு கோட் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடியும் என தெரிகிறது.
இதன்பின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்குகின்றன. விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கிராபிக்ஸ் தொடர்பான வேலைகள் அதிகம் உள்ளன. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படம் தயாரிக்கும் நிறுவனமான ஏஜிஎஸ் அறிவித்துள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்., 5ல் இந்தப்படம் ரிலீஸாகிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியிடுகின்றனர்.