அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தின் வெற்றிக்கு அல்லு அர்ஜுன் நடிப்பு, ஆக்சன் காட்சிகள், பஹத் பாசிலின் வில்லத்தனம், ராஷ்மிகா மற்றும் சமந்தாவின் பாடல் காட்சிகள் என பல அம்சங்கள் துணை நின்றன. இந்த நிலையில் முதல் பாகத்தை விட அதிக எதிர்பார்ப்புடன் புஷ்பா-2 உருவாகி வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு நாயகி ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திர போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
நேற்று படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த படத்தின் அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் லீக் ஆகி உள்ளது. சமீபநாட்களாக பஹத் பாசிலின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் பஹத் பாசிலுக்கு ஸ்கிரிப்ட் பற்றி விளக்கம் அளித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமாக தெரிகிறது.