இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
சிறுத்தை சிவா இயக்கத்தில் ‛கங்குவா' படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா அடுத்தபடியாக சுதா இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக அறிவித்தார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைய்ன்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
ஆக்சன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்திற்காக தற்போது குதிரை சவாரி செய்யும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சூர்யா. அதனால் இப்படம் சரித்திர காலகட்ட கதையில் உருவாகிறதா என்ற யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.