நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

'வானவில் வாழ்க்கை' படத்தின் மூலம் அறிமுகமானவர் மாயா. அதன்பிறகு தொடரி, சர்வர் சுந்தரம், மகளிர் மட்டும், 2.ஓ, லியோ உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்தார். 'விக்ரம்' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் புகழ் அடைந்தார். தற்போது அவர் தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்திற்கு 'பைட்டர் ராஜா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ராம்ஸ், தணிகெல்ல பரணி, தாகுபோத்து ரமேஷ், கிருஷ்ண தேஜா, பவன், ரமேஷ், சசிதர், சக்ரதர், ரோஷன், சிவானந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்மரன் சாய் இசை அமைத்துள்ளார். ஸ்ரீதர் காகிலேட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. படம் பற்றி இயக்குனர் கிருஷ்ண பிரசாத் கூறியதாவது: தவறான வழிகளில் பணம் சம்பாதிக்க விரும்பும் ஒரு இளைஞனைப் பற்றிய படம். அவன் ஒரு கொடூர குற்றச் செயலில் சிக்க வைக்கப்படுவதும் அதிலிருந்து அவன் தப்பிப்பதும்தான் படத்தின் கதை. இதனால் அந்த இளைஞனின் வாழ்க்கை, குடும்பம் எப்படி மாறுகிறது என்பது திரைக்கதை. நாயகி மாயா தமிழுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால் படத்தை தமிழிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.