ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த குருவாயூர் அம்பலநடையில் | பெண் குழந்தைக்கு தாயான யாமி கவுதம் : குழந்தையின் பெயரையும் வெளியிட்டார் | நான்கே மாதத்தில் 1000 கோடி வசூல் : மலைக்க வைக்கும் மல்லுவுட் | பிரேம் நசீர் சாதனையை முறியடிங்கள் : மோகன்லாலுக்கு கமல் வாழ்த்து | சீரியலை விட்டு விலகிய வீஜே விஷால் - காரணம் இதுதானா? | ஜெய் ஆகாஷ் உடன் ஜோடி சேரும் ரேஷ்மா | தலைப்புக்கு தணிக்கை குழு எதிர்ப்பு : 'வடக்கன்' பட ரிலீஸ் தள்ளிவைப்பு | யோகி பாபு நடிக்கும் 'வானவன்' | மலையாளத்தில் ரீமேக் ஆகும் 'ஆதார்' | பாயல்ராஜ் புத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் |
சின்னத்திரையில் நட்சத்திர தொகுப்பாளராக பணியாற்றிவர் ஆடம்ஸ். சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தும் உள்ளார். அவர் தற்போது 'கேன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், கருணாநிதி தயாரிக்கிறார். இப்படத்தில் பிரணவி மனுகொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா ராஜ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, கலையரசன், யாஷிகா ஆனந்த், தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கருணாகரன், மாறன், ஸ்ரீமன், க்ஷிஜிக்ஷி கணேஷ், கௌசல்யா, ரெடின் கிங்ஸ்லி, நாஞ்சில் விஜயன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஸ்வமித்ரா இசை அமைக்கிறார், பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி ஆடம்ஸ் கூறும்போது “இன்றைய தலைமுறை இளம் பெண்களின் வாழ்க்கை, அவர்களின் பார்வையிலான காதலை மையப்படுத்தி, நகைச்சுவையுடன் கூடிய அழுத்தமான, ஜனரஞ்சக திரைப்படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க, ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.