நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் 'அழகிய தீயே' படம் மூலமாக அறிமுகமானவர் மலையாள நடிகை நவ்யா நாயர். தொடர்ந்து சேரனுடன் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாளத்தில் அதிக அளவில் படங்களின் நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு பத்து வருடங்கள் பெரிய அளவில் படங்களில் நடிக்காத அவர் தற்போது மீண்டும் மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்த நவ்யா நாயர் அதில், தான் ஓரளவு பயன்படுத்திய மற்றும் இன்னும் பயன்படுத்தப்படாத பல புடவைகளை நியாயமான விலைக்கு விற்கப் போவதாகவும் விரும்புபவர்கள் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். இப்படி ஒரு நடிகை தனது சேலைகளை விற்று பணம் பார்க்கிறாரே என்று பலரும் அவரை கிண்டலடிக்க துவங்கினர்.
ஆனால் அவர் இதில் வரும் தொகையை ஆதரவற்றோர் இல்லத்திற்கும் பலரின் மருத்துவ உதவிகளுக்கும் பள்ளிக் குழந்தைகளின் கல்வி செலவுக்கும் நன்கொடையாக கொடுத்து வருகிறார் என்கிற தகவல் தற்போது வெளியே தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அவர்கள் அனைவரையும் பார்வையிட்டு அவர்களுடன் நேரம் செலவழித்துள்ளார் நவ்யா நாயர். இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தெரிந்ததும் அனைவருமே அவருடைய நல்ல உள்ளத்தை பாராட்டி வருகின்றனர்.