மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் நடிக்கவுள்ளார். அனிரூத் இசையமைக்கிறார். இதன் முன் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதன் டைட்டில் டீசர் வருகின்ற ஏப்ரல் 22ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். தொடர்ந்து தற்போது கிடைத்த புதிய தகவலின் படி, இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த மாநகரம், கைதி போன்று ஒரு இரவில் நடைபெறும் கதையாக படத்தின் கதைகளம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.