ரெட்ரோ பட வாய்ப்பு : மனம் திறந்த பூஜா ஹெக்டே | முதன்முறையாக கார்த்தி உடன் நடிக்கும் வடிவேலு | ஹாலிவுட் நடிகைகள் கெட்டப்புக்கு மாறிய சமந்தா | விஜய்யுடன் போட்டி நடனம் ; சாய் பல்லவி விருப்பம் | திரையுலக பயணத்தில் 40 வருடங்களை நிறைவு செய்த நதியா | சல்மானின் ‛சிக்கந்தர்' படத்தில் சத்யராஜ் | எம்புரான் 2வில் பஹத் பாசிலா : யூகத்தை கிளப்பிய புகைப்படம் | மூன்று வருடமாக நான் சிங்கிள் தான் ; ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்த பார்வதி | விடாமுயற்சி படத்திற்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி | ''கேரவனில் நடந்த சம்பவம்...'': மனமுடைந்த நிகழ்வை பகிர்ந்த தமன்னா |
இந்திய சினிமாவின் முக்கியமான படமாக கொண்டாடப்பட்டு வருகிறது 'ஆடுஜீவிதம்'. பிளஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள இந்த படம் அரேபிய பாலைவனத்தில் அடிமையாக்கப்பட்ட ஒரு மலையாள இளைஞன் பற்றிய கதை அம்சத்தை கொண்டது. 16 வருட திட்டமிடல், 6 வருட உழைப்பு. கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகள் இவற்றை கடந்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படியான படம் வெளியான சில நாட்களிலேயே நல்ல தொழில்நுட்ப தரத்துடன் இணையத்தில் கசிந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் பிளஸ்சி எர்ணாகுளம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
“இந்த படம் பாலைவனத்தில் வியர்வையும், ரத்தமும் சிந்தி உருவாக்கப்பட்டது. இது இணையத்தில் கசிந்ததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும். படம் வெளியான சில மணி நேரங்களிலேயே கனடாவில் இருந்து இணையத்தில் கசிந்துள்ளது” என்று தனது புகாரில் உள்ளார். அதோடு அதற்கான ஆதாரத்தையும் போலீசிடம் கொடுத்துள்ளார்.