ரெட்ரோ பட வாய்ப்பு : மனம் திறந்த பூஜா ஹெக்டே | முதன்முறையாக கார்த்தி உடன் நடிக்கும் வடிவேலு | ஹாலிவுட் நடிகைகள் கெட்டப்புக்கு மாறிய சமந்தா | விஜய்யுடன் போட்டி நடனம் ; சாய் பல்லவி விருப்பம் | திரையுலக பயணத்தில் 40 வருடங்களை நிறைவு செய்த நதியா | சல்மானின் ‛சிக்கந்தர்' படத்தில் சத்யராஜ் | எம்புரான் 2வில் பஹத் பாசிலா : யூகத்தை கிளப்பிய புகைப்படம் | மூன்று வருடமாக நான் சிங்கிள் தான் ; ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்த பார்வதி | விடாமுயற்சி படத்திற்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி | ''கேரவனில் நடந்த சம்பவம்...'': மனமுடைந்த நிகழ்வை பகிர்ந்த தமன்னா |
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் போஸ் வெங்கட். பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்த அவர் 'கன்னி மாடம்' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். ஜாதி ஆணவக்கொலை பற்றி பேசிய இந்த படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இயக்குனர் யார் கண்ணனின் மகள் சாயாதேவி நாயகியாக அறிமுகமாகியிருந்தார்.
போஸ் வெங்கட் தற்போது 'மா.பொ.சி' படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ் தயாரிக்க, விமல் கதையின் நாயகனாக நடிக்க, சாயாதேவி நாயகியாக நடித்துள்ளார். பருத்தி வீரன் சரவணன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை போஸ் வெங்கட், இயக்குனர் வெற்றி மாறனுக்கு போட்டுக் காட்டினார். அவருக்கு படம் பிடித்து விடவே தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் படத்தை வாங்கி வெளியிடுகிறார். விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
“மா.பொ.சி என்பது சிலம்பு செல்வர் மா.பொ.சியின் கதை அல்ல. அவருக்கும் இந்த படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சென்னை இளைஞன் ஒருவன் வாழ்க்கையை வித்தியாசமாக சொல்லும் படம். படத்தின் பணிகள் முடிந்து விட்டது. வெற்றிமாறன் படத்தை வெளியிட ஒப்புக் கொண்டதே படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இது தியேட்டர்களிலும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்கிறார் போஸ் வெங்கட்.