ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சிவாஜி நடித்த படங்கள் வெற்றியோ தோல்வியா ஏதாவது ஒரு விதத்தில் அந்த படம் முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும். ஆனால் ஒரு சில படங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சென்று விடும். அப்படியான ஒரு படம் தராசு. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த படத்தில் பிரபு முதன் முறையாக இரண்டு வேடத்தில் நடித்திருந்தார்.
1984ம் ஆண்டு வெளியான இந்த படத்தை ராஜகணபதி என்பவர் இயக்கி இருந்தார். சிவாஜி ஜோடியாக கே.ஆர்.விஜயாவும், பிரபு ஜோடியாக அம்பிகாவும் நடித்திருந்தார்கள். இவர்கள் தவிர எஸ்.வரலட்சுமி, வி.கே.ராமசாமி, எம்.என்.நம்பியார், எஸ்.வி.ராமதாஸ், சி.கே.சரஸ்வதி, ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ்குமார், கல்லாபெட்டி சிங்காரம், வடிவுக்கரசி, அருந்ததி, சில்க் சுமிதா, சிலோன் மனோகர், ஹெரான் ராமசாமி, எம்.ஜி.ஆர்.நடராஜன், ஜோதி சண்முகம், ஜெமினி பாலு, காந்திமதி, சோழராஜன், வான்மதி, நியூடோன் கணேசன், பூரணம் விசுவநாதன், உசிலை மணி நடித்திருந்தனர். சில்க் ஸ்மிதா “நான்தானய்யா சிலுக்கு சிலுக்கு” என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். மிகப்பெரிய கமர்ஷியல் பேக்கேஜாக வெளியான இந்த படம் பெரும் தோல்வி அடைந்தது.