ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சென்னை : தன் மகன் விஜய்யை, புஸ்ஸி ஆனந்த் ஏமாற்றுவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை நடிகர் விஜய் துவக்கியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு, பிப்., மாதம் 2ம் தேதி விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதுவரை கட்சி பதிவு செய்யப்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை. கட்சிக்கு இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக, மொபைல் போன் செயலியும் மார்ச்சில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒரே வாரத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின், உறுப்பினர் சேர்க்கை என்னவானது என்ற விபரம் வெளியிடப்படவில்லை. இது, ரசிகர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்திஉள்ளது.
இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜயை ஏமாற்றுவதாக, விஜயின் தந்தை சந்திரசேகர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
அதில், சந்திரசேகர் கூறியிருப்பதாவது: புஸ்ஸி ஆனந்த், ஒரு சமூக வலைதள பக்கத்தை வைத்துள்ளார். இதில், விஜய் உட்பட 50 பேர் உள்ளனர். அதில், கட்சிக்காக புஸ்ஸி ஆனந்த் கஷ்டப்படுவது போன்ற பதிவுகள் போடப்படுகின்றன. அதை பலரும், 'லைக்' செய்கின்றனர். இதை பார்த்து, புஸ்ஸி ஆனந்த் கடுமையாக உழைப்பதாக விஜய் நம்பிக் கொண்டிருக்கிறார். விஜய்யை ஏமாற்றுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‛‛இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதற்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது. உரிய நேரத்தில் விஜய் பதில் அளிப்பார்'' என்றனர்.