நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த மாதத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர் கயல் ஆனந்தி நடித்துள்ள மங்கை மற்றும் அமீர் இயக்கி வரும் இறைவன் மிகப்பெரியவன் போன்ற படங்களை தயாரித்துள்ளார். அதனால் ஜாபர் சாதிக் கைதானபோது அவருடன் அமீரையும் இணைத்து சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வந்தன. அதையடுத்து அவர் ஜாபர் சாதிக்கின் போதை பொருள் கடத்தலுக்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது இயக்குனர் அமீரிடத்திலும் விசாரணை நடத்துவதற்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் சம்மன் அனுப்பி உள்ளது. வருகிற ஏப்ரல் 2ம் தேதி டில்லியில் உள்ள போதைப் பொருள் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.