நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் 'தி கோட் லைப்' ( ஆடுஜீவிதம்). இப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கினார்.
கடந்த மார்ச் 28ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் 1,724 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. முதல் நாளில் 16 கோடியே 70 லட்சம் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில், தற்போது 4வது நாளிலேயே ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தை பல சினிமா பிரபலங்களும் பாராட்டியுள்ளனர். நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம், ராஜீவ் மேனன், நடிகர்கள் மாதவன், கவுதம் கார்த்திக், யோகிபாபு, கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.