அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சின்னத்திரை பிரபலமான பாலா தனக்கு கிடைக்கும் வருமானத்தில் சமூக அக்கறையுடன் தன்னால் முடிந்த வரை பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அதேபோல தான் நடிகர் லாரன்ஸும் பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், பாலாவை நிகழ்ச்சி ஒன்றில் பாராட்டிய லாரன்ஸ், இனி பாலா செய்யும் உதவிகளில் என்னுடைய பங்கும் இருக்கும் என்று கூறியிருந்தார். அதற்கேற்றார் போல் இருவரும் ஒன்றாக சேர்ந்து திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ஒரு பள்ளிக்கு கழிப்பறை வசதி செய்து கொடுத்தனர். மேலும், தற்போது கணவரை இழந்து மூன்று மகள்களை காப்பாற்றி வரும் ஒரு பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து அவருக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கி கொடுத்துள்ளனர்.
முதல் சவாரியாக இவர்கள் இருவரும் ஆட்டோவில் அமர, முருகம்மாள் அந்த ஆட்டோவை ஓட்டி செல்கிறார். இது குறித்து வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். இந்த வீடியோ வைரலாகி வருவதை அடுத்து அந்த பெண்ணுக்கு உதவி செய்த நடிகர்கள் ராகவா லாரன்ஸ்- பாலா ஆகிய இருவருக்கும் சோசியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.