ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

உலகையே உலுக்கிய சம்பவம் கோத்ரா ரயில் எரிப்பு. 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி அன்று காலை கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்ரீகர்கள் மற்றும் கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மதக்கலவரம் வெடித்தது. இதை மையமாக வைத்து ஹிந்தியில் சில படங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இப்போது 'தி சபர்மதி ரிப்போர்ட்' என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இதை ரஞ்சன் சண்டேல் இயக்கியுள்ளார். இதில் '12-த் பெயில்' படம் மூலம் புகழ்பெற்ற விக்ராந்த் மாசே நாயகனாக நடித்துள்ளார். ராஷி கண்ணா நாயகியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மே மாதம் 3ம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.