அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை |
இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் புருஸ்லீ என்கிற தோல்வி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன் பிறகு பல போராட்டங்களுக்கு பிறகு 'விலங்கு' என்கிற வெப் தொடரை இயக்கினார். விமல், இனியா, முனீஷ்காந்த் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றது. இப்போது 'விலங்கு சீசன் 2' வெப் தொடரை இயக்கி வருகிறார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார் பிரசாந்த் பாண்டியராஜன். இந்த வெப் தொடரில் கதிர், திவ்யா பாரதி, பூர்ணிமா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கேங்க்ஸ்டர் பின்னணியில் நடைபெறும் இந்த வெப் தொடருக்கு 'லிங்கம்' என தலைப்பு வைத்துள்ளனர்.