'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனது போர்ஷனை முடித்து கொடுத்துவிட்ட ராம் சரண் அடுத்து புச்சி பாபு இயக்கத்தில் தனது 16வது படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். ரித்தி சினிமா, மைத்ரி மூவீஸ் நிறுவனங்கள இணைந்து தயாரிக்கிறது. படத்தின் பணிகள் சமீபத்தில் தொடங்கியது.
இந்த நிலையில் ராம் சரணின் 17 வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெயரிடப்படாத இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
'ரங்கஸ்தலம்' படத்திற்குப் பிறகு ராம்சரண் - சுகுமார் கூட்டணி இணைந்திருக்கிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.