'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
பத்து வருடங்களுக்கு முன்பு அறிமுக நடிகர்கள் என்கிற அளவில் வளர்ந்து கொண்டிருந்தவர்கள் தான் சிவகார்த்திகேயன், விமல், சூரி மற்றும் சதீஷ். இப்போது ஒவ்வொருவரும் திரையுலகில் அவர்களுக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இதில் விமல், சிவகார்த்திகேயன், சதீஷ் அனைவருமே இயக்குனர் பாண்டிராஜால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
2013ல் பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், விமல் இருவரும் கதாநாயகனாக நடிக்க சூரி முக்கிய வேடத்தில் நடித்திருந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த சிவகார்த்திகேயன், வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த சூரி, விமல் மற்றும் சதீஷ் ஆகியோர் விமான நிலையத்தில் ஒன்றாக நீண்ட நாளைக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர்.
இந்த அபூர்வ சந்திப்பு குறித்த புகைப்படத்தை நடிகர் சதீஷ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டதுடன், ‛கேடி பில்லா கில்லாடி ரெமோ' என்று இந்த சந்திப்பை குறிப்பிட்டுள்ளார்.