'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தமிழ், மலையாள சினிமாக்களில் 80களில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நதியா. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு மும்பையில் செட்டிலாகிவிட்ட நதியா தற்போதும் அங்குதான் வசித்து வருகிறார்.
நேற்று ஹோலி பண்டிகை அவரது அபார்ட்மென்ட்டில் கொண்டாடி உள்ளார். அது குறித்த வீடியோ ஒன்றையும் பகிர்ந்து, “அனைவருக்கு மகிழ்ச்சியான ஹோலி வாழ்த்துகள். ஆலியா பட், ரன்பீர், ரஹா மற்றும் நண்பர்களுடன் ஹோலி கொண்டாடியது மிக்க மகிழ்ச்சி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
நதியா, ஆலியா ஆகியோர் ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார்கள். அந்த வளாகத்தின் பார்க்கிங்கில் ரன்பீர், ஆலியா மீது வண்ணப் பொடிகளைத் தடவி நதியா ஹோலியைக் கொண்டாடியுள்ளார்.