நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய், அஜித் புதிய படங்களில் நடிக்கிறார்கள் என்றால் அந்தப் படங்களைப் பற்றிய அப்டேட்டை அடிக்கடி தந்து கொண்டிருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் அவர்களது ரசிகர்கள் கிடைக்கும் 'கேப்'களில் எல்லாம் 'அப்டேட் எங்கே, அப்டேட் எங்கே' என கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
விஜய் நடிக்கும் 'கோட்' படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு தீவிர கிரிக்கெட் வெறியர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் இயக்கிய முதல் படமான 'சென்னை 28' படமே கிரிக்கெட்டைப் பற்றிய படம்தான்.
'கோட்' பட வேலைகளுக்கு நடுவிலும் வெங்கட் பிரபு ஐபிஎல் போட்டிகளைப் பார்த்து வருகிறார். நேற்றைய பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டியின் போது 'யு பியூட்டி தினேஷ் கார்த்திக்' எனப் பதிவிட்டிருந்தார். அப்பதிவில் 'அப்டேட் எங்கே' என்ற கமெண்ட்டுகள்தான் அதிகம் இருந்தது.
நிம்மதியாக ஐபிஎல் போட்டிகளைக் கூட பார்க்க விடாமல் செய்கிறார்களே என்ற கோபத்தில்… விஜய் ரசிகர்களிடம் கோப்பட முடியுமா ?. அதனால், செல்லமான கோபத்தில், “அநியாயம் பண்ணாதீங்க... அப்டேட் மிக விரைவில் நண்பா நண்பிஸ், கோட்… அது சிறப்பான அப்டேட் ஆக இருக்கும் என்னை நம்புங்க,” என அடுத்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கும் பலவிதமான கமெண்ட்டுகளைப் பதிவிட்டுள்ளார்கள் விஜய் ரசிகர்கள்.