நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தென்னிந்தியத் திரையுலகத்தில் இந்த ஆண்டில் சில முக்கியமான பிரம்மாண்டமான படங்கள் வெளிவர உள்ளது. அவற்றில் 'கல்கி 2898 ஏடி' படமும் ஒன்று. நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, திஷா பதானி, அமிதாப்பச்சன் ஆகியோருடன் கமல்ஹாசனும் இப்படத்தில் நடிக்கிறார்.
கமல்ஹாசன் கதாபாத்திரம் தான் படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரம் என்ற தகவல் ஏற்கெனவே பரவி இருந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படத்தில் தான் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார். இது படத்தின் கதாநாயகன் பிரபாஸ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படம் பற்றிய ரகசியத்தை படக்குழுவினர் இதுவரை காப்பாற்றி வருகிறார்கள். இதனிடையே, கமல்ஹாசன் அவரது கதாபாத்திரம் பற்றிய ரகசியத்தை உடைத்துவிட்டார். அதனால், படத்தின் வில்லன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேசமயம், முதல் பாகத்தில் அவர் சிறப்புத் தோற்றம்தான், இரண்டாம் பாகத்தில் அவர்தான் முக்கிய வில்லன் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
படக்குழுவினர் இது பற்றி அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.