பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் | காதலியுடன் பொது நிகழ்வில் முதல்முறையாக ரவி மோகன் | 'கைதி 2' படத்திற்குப் பிறகு 'ஹிட் 4'ல் நடிக்க உள்ள கார்த்தி | 'ஆபரேஷன் சிந்தூர்' : டிரேட் மார்க் பதிவுக்கான விண்ணப்ப சர்ச்சை | 'ரெட்ரோ' ருக்கு - வாழ்த்தியவர்களுக்கு பூஜா ஹெக்டே நன்றி | லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் ‛தி கோட்'. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிறப்பு வேடத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கேரளாவில் படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில் அடுத்தபடியாக ரஷ்யா சென்று சில பாடல் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார் வெங்கட்பிரபு. இன்னொரு பக்கம் கோட் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் நடைபெற்று வருகிறது.
கோட் படம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21ல் திரைக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு மற்றும் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ஆகஸ்ட் 23ம் தேதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.