நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்களின் நேற்றைய அதிர்ச்சியாக 'இனிமேல்' என்ற ஆல்பத்தின் வீடியோ முன்னோட்டம் அமைந்துள்ளது. கமல்ஹாசன் தயாரிக்க, கமல்ஹாசன் பாடலை எழுத, இசையமைத்து, கருத்தாக்கம் செய்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
இந்த ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனின் தாராள கவர்ச்சி ஒரு அதிர்ச்சி என்றால் மற்றொரு அதிர்ச்சியாக ஸ்ருதிஹாசன் ஜோடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்திருப்பதும் அமைந்துள்ளது. இன்ஸ்டா, பேஸ்புக், எக்ஸ் என எந்தப் பக்கம் போனாலும் இளம் ரசிகர்கள் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி பேச வேண்டும் என்பதால் இப்படி ஒரு ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்களா என்ற கேள்வியும் எழுகிறது. ஸ்ருதியுடன் லோகேஷ் இவ்வளவு நெருக்கமாக நடித்திருப்பது ரசிகர்களை வியப்படையவும் வைத்துள்ளது. 'என்னப்பா லோகி இது ?' என பல ரசிகர்கள் கேட்டுள்ளார்கள். விரைவில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
குடும்பத் தயாரிப்பு என்று சொன்னாலும், குடும்பத்துடன் பார்க்கக் கூடிய தயாரிப்பு அல்ல என்பது மட்டும் 'இனிமேல்' டீசரைப் பார்த்ததும் புரிகிறது.