இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
சின்னத்திரை தம்பதிகளான பிரஜன் - சாண்ட்ரா தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். தற்போது பிரஜன் மட்டும் ஆக்டிவாக சினிமாக்களில் நடித்து வருகிறார். சாண்ட்ரா பொறுப்பான குடும்ப தலைவியாக குழந்தைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் இருவரும் ஜோடியாக பேட்டி அளித்துள்ளனர்.
அதில், 'நாங்கள் காதலிக்கும் போது எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தான் அரிசி மூட்டை எடுத்து தந்தார். குழந்தைகள் பிறந்த பின் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தோம். யாருமே உதவி செய்யவில்லை. பிரஜன் இரவு முழுவதும் தூங்காமல் குழந்தையை பார்த்துக் கொள்வார். எங்கள் இருவருக்குமிடையே நல்ல புரிதல் இருந்ததால் தான் எங்களுடைய கஷ்டமான காலத்தை கடந்து வந்தோம்' என கூறியுள்ளனர்.