இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

நடிகர் ரோபோ சங்கர் திரைப்பட சூட்டிங்கிற்காக ஊட்டி சென்றுள்ளார். அங்கே சூட்டிங் ஸ்பாட்டில் தான் படும் கஷ்டங்களை வீடியோவாக வெளியிட்டுள்ள ரோபோ சங்கர், 'ஊட்டில காலையில 6 மணிக்கு சூட்டிங் கூப்பிடுறார் ஆடம்ஸ். நான் இங்க ஊசி போட்டு வந்து உட்கார்ந்து இருக்கேன். இங்க என்னடனா காலையில் 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரை சூட்டிங் எடுக்கனுமாம். படத்தோட டைட்டில கேட்டாலும் சொல்ல மாட்றான். சாப்பாட்ட வாயில வைக்கும் போது தான் கூப்பிடுறான். ஏன் தான் இப்படி பாடா படுத்துறானோ?. ஆடம்ஸ் தானே படம் எடுக்கிறான். தம்பி ஆசைப்பட்டு கூப்பிட்டான்னு வந்துட்டேன். டைத்துக்கு சோறுபோட்டு படுக்க வைக்க வேண்டாமா இந்த பனியில' என்று அந்த வீடியோவில் தனது ஸ்டைலில் காமெடியாக புலம்பியிருக்கிறார். அந்த வீடியோவானது வைரலானது. காமெடிக்காக இந்த வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் ரோபோ சங்கர்.