இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

நடிகர் ரஜினகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. சென்னையில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை துவக்க விழாவில் ரஜினி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விழாவில் பேசிய அவர், ‛‛நான் எந்த ஒரு கட்டடம் திறப்பு விழாவுக்கு சென்றாலும் உடனே அதில் நானும் பார்டனர் என சொல்கிறார்கள். இந்த உடம்பு சென்னையில் உள்ள பல மருத்துவமனைகளில் இருந்து சிங்கப்பூர், அமெரிக்கா வரை போய்விட்டு வந்துள்ளது. எனக்கு ஒரு மேஜர் ஆபரேஷன் இங்குள்ள மருத்துவமனையில் தான் வெற்றிகரமாக நடந்தது.
ஒழுக்கம், நாணயம், ஈடுபாடு, விடாமுயற்சி என இந்த நான்கு விஷயம் யாரிடம் இல்லையோ அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது. கமல் வீட்டருகே காவிரி மருத்துவமனை இருந்தது என்பது போய் காவிரி மருத்துவமனை அருகில் கமல் வீடு உள்ளது என சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது.
நான் இப்படி பேசுவதால் கமல்ஹாசன் தப்பா நினைக்காதீங்க. மீடியாக்காரர்களே ஒரு உதாரணத்திற்கு சொன்னேன். இங்க வந்த உடனே எனக்கு மீடியாவை பார்த்ததும் பயம் வந்துவிட்டது. அதுவும் தேர்தல் நேரத்தில் மூச்சுவிட்டால் கூட பயமாக உள்ளது. எல்லாவற்றிலும் கலப்படம் வந்துவிட்டது. மருந்திலும் கூட கலப்படம் வந்து இருக்கு. குழந்தைகளுக்கு அளிக்கும் மருந்தில் கூட கலப்படம் உள்ளது. அவ்வாறு செய்யும் நபர்களை தெருவில் இழுத்து சென்று அவர்களை சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும்'' என்றார் ரஜினி.