நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சென்னை பெண்ணான சமந்தா, தமிழை விட தெலுங்கில் சில பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர். சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது அந்த நோய் பாதிப்பால் அவருக்கு ஏற்பட்ட சிரமங்கள் பற்றி பேசியிருந்தார்.
“எனது உடல்நிலை பாதிப்பு பற்றி நான் வெளிப்படையாக சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் கதாநாயகியை முன்னிலைப்படுத்திய எனது படம் வந்த நேரம். அதற்கு முன்பு நான் உடல்நலக் குறைவில் இருந்தேன், மிகவும் கடினமான காலகட்டம். நான் எதற்கும் தயாராக இல்லை. இருந்தாலும் ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளிவந்தன. அந்த சமயத்தில் படத்தை விளம்பரப்படுத்த தயாரிப்பாளர்களுக்கு எனது தேவை இருந்தது. இல்லையென்றால் அந்தப் படம் இறந்துவிடும்.
அதனால், எனது பேட்டி ஒன்றிற்கு நான் சம்மதித்தேன். ஆனால், அப்போது எனது தோற்றம் சரியில்லை. என்னை நிலையாக வைத்திருக்க அதிக அளவு மருந்துகளை எடுத்துக் கொண்டேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் அதை வெளியில் அறிவித்திருக்க மாட்டேன்.
அதன்பின் மக்கள் என்னை 'அனுதாப ராணி' என்று அழைத்தார்கள். ஒரு நடிகையாக, ஒரு மனிதப்பிறவியாக எனது பயணம் மிகவும் வளர்ச்சியான ஒன்றுதான். எனது ஆரம்பகாலத்தில் மோசமான கட்டுரைகளையும், என்னைப் பற்றி எழுதப்பட்டதையும் தேடினேன். அதிகமான மக்கள் என்னை குற்றம் சாட்டியுள்ளார்கள். ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு விதமான கேள்வியைக் கேட்டேன். நான் பெருமைப்படக் கூடிய அளவிக்கு அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி மாற்றியுள்ளார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.