மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடித்துள்ள படம் 'ரோமியோ'. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் ஆண்டனியிடம் படத்தின் போஸ்டரில் நாயகி மது அருந்துவது போன்ற காட்சி இருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி, ‛‛குடிப்பது தவறு தான். ஆண், பெண் என்றெல்லாம் இல்லை. நம் நாட்டில் குடி என்பது நீண்ட காலமாகவே உள்ளது. திராட்சை ரசம் என்ற பெயரில் ஜீசஸ் கூட குடித்துள்ளார்'' என்றார். இது வைரலாக தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி விஜய் ஆண்டனி வெளியிட்ட விளக்கம் : ‛‛திராட்சை ரசம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் இருந்தது. தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி உள்ளார் என்று கூறினேன். ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளை தொடர்ந்து நான் பேசியதை இணைத்து தவறாக அர்த்தப்படுத்தியதால் சிலரின் மனம் புண்பட்டுள்ளது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது'' என தெரிவித்துள்ளார்.