இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

கடந்த ஆண்டு தனது காதலர் ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால். அதையடுத்து கடந்த ஜனவரியில் தான் கர்ப்பமாக இருப்பதாக சில போட்டோக்களையும் வெளியிட்டு இருந்தார். பின்னர் ஈஷா யோகா மையத்துக்கு சென்று தியானம் செய்த புகைப்படங்கள், மலையாளத்தில் பிரித்விராஜுடன் நடித்த ஆடு ஜீவிதம் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் என தொடர்ந்து வெளியிட்டு வந்த அமலாபால், தற்போது தனது கணவருடன் ஒரு மது பார்ட்டில் கலந்து கொண்ட வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் கணவருடன் இணைந்து அமலாபால் நடனமாடியுள்ள காட்சியும் இடம் பெற்றிருக்கிறது. அத்துடன் தான் 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கர்ப்பமாக இருக்கும் நிலையில் இது போன்ற மதுபான பார்ட்டியில் கலந்து கொண்டு நடனம் ஆட வேண்டுமா என்று அவரது செயல்பாட்டை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.