நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமாகி அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. தற்போது சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார். சிவாங்கிக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில் ஒரு ரசிகர் சிவாங்கி அண்மையில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை பார்த்து, 'ஐஸ்கிரீம் சாப்பிடாதீங்க. குரல்வளம் போய்விடும். சித்ரா, சுஜாதா போல் கட்டுப்பாடாக இருந்து உங்க திறமையை வளர்த்துகோங்க' என்று அட்வைஸ் செய்துள்ளார்.
அதற்கு பதிலளித்த சிவாங்கி, 'நான் எதை சாப்பிடனும் எதை சாப்பிடக்கூடாதுன்னு அட்வைஸ் செய்ய வேண்டாம். எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் செய்ய முடியும். உங்களுக்காக நான் வாழ முடியாது' என பதில் கொடுத்துள்ளார். சிவாங்கியின் இந்த பதிவிற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், பலர் அந்த நபர் சிவாங்கியின் நல்லதுக்கு சொல்லியிருக்கிறார். சிவாங்கி பொறுமையாக அவருக்கு விளக்கம் கொடுத்திருக்கலாம் என்று கூறி உள்ளனர்.