நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் அசோக் செல்வன் காதல், திரில்லர் என வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ‛ஓ மை கடவுளே, போர் தொழில், ப்ளூஸ்டார்' என அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்தார். தற்போது பாலாஜி கேசவன் இயக்கத்தில் 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' என்கிற புதிய படத்தில் நடித்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. அவருக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திருமலை கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பை வைத்து பார்க்கையில் இது ரொமான்ஸ் கதையாக இருக்கும் என தெரிகிறது.