ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரில் நடித்து மிகவும் பிரபலமானவர் மதுமிலா. தொடர்ந்து வெள்ளித்திரையில் பூஜை, ரோமியோ ஜூலியட், மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். மதுமிலாவுக்கு ரசிகர்களிடம் இருந்து வரவேற்புக்கு கண்டிப்பாக பெரிய நடிகையாக வலம் வருவார் என்று பலரும் நம்பினர். ஆனால், மதுமிலா கனடாவை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிலேயே செட்டிலாகிவிட்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது பிரபலமான மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக கலக்கி வருகிறார்.
அவர் அண்மையில் அளித்த பேட்டியில் நடிப்புக்கு எப்போது கம்பே? எதற்காக இவ்வளவு பெரிய கேப்? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மதுமிலா, ‛‛கேப் என்றெல்லாம் இல்லை ரிட்டையர்ட் தான். நடிப்பதை நிறுத்திவிட்டு தான் திருமணம் செய்து கொண்டேன்'' என பளீச் பதில் அளித்துள்ளார். மதுமிலா கம்பே கொடுப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவரது பதில் சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது.