60வது வயதில் புது காதலியை அறிமுகம் செய்த அமீர்கான் | இப்படி செய்தால் வாய்ப்பு கிடைக்குமா? : சிவாங்கி நெத்தியடி பதில் | கார் தவணை கூட கட்டமுடியாத கஷ்டம்! ஆனால் இப்போது? | ஜி.வி. பிரகாஷ்க்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்த 25வது படம் 'கிங்ஸ்டன்' | திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம்: நடிகை ரூபினியிடம் ஒன்றரை லட்சம் மோசடி! | கூலி படப்பிடிப்பில் 39வது பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்! | 55வது படத்தில் பயோபிக் கதையில் நடிக்கும் தனுஷ்! | பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியன்கர்! | அஜித்தின் 'குட் பேட் அக்லி', சூர்யாவின் 'ரெட்ரோ' இரண்டு படங்களும் ஒரே மாதிரி கதையா? | வெங்கட் பிரபுவிடம் அவகாசம் கேட்ட அக்ஷய் குமார் |
தமிழ் இயக்குனர்கள் அவ்வப்போது ஹிந்தியிலும் சென்று 'சூப்பர் ஹிட்' கொடுத்துவிட்டு வந்துவிடுவது வழக்கம். தமிழ் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த 'கஜினி' ஹிந்திப் படம் அங்கு 100 கோடி வசூலை ஆரம்பித்து வைத்தது. அதன்பின் ஹிந்தியில் முருகதாஸ் இயக்கிய 'ஹாலிடே, அகிரா' ஆகியவை பெரிய வெற்றி பெறவில்லை. ஒரு இடைவெளிக்குப் பிறகு சல்மான்கான் நடிக்க உள்ள படத்தை முருகதாஸ் இயக்குவது குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.
ஆனால், இதிலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ் இயக்குனரான விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் நடித்து வந்த 'த புல்' ஹிந்திப் படத்தைத் தள்ளிவைத்துவிட்டு முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் நடிக்க இருப்பது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம்தான் 'த புல்'. இப்படம்தான் அடுத்த வருட ஈத் நாளன்று வெளியாகும் என்று சொன்னார்கள். இப்போது அதற்குப் பதிலாக முருகதாஸ், சல்மான் இணைய உள்ள படம்தான் அந்தத் தேதியில் வெளிவர உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
ஒரு தமிழ் இயக்குனரைக் காத்திருக்க வைத்துவிட்டு, மற்றொரு தமிழ் இயக்குனருக்கு சல்மான் வரவேற்பு தந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ணுவர்தன் தமிழில் அஜித் நடித்த 'பில்லா, ஆரம்பம்' ஆர்யா நடித்த 'பட்டியல், சர்வம், யட்சன்' படங்களை இயக்கியவர். ஹிந்தியில் அவர் இயக்கி ஓடிடியில் வெளிவந்த 'ஷெர்ஷா' பெரும் வரவேற்பைப் பெற்றது. 2021ல் வெளிவந்த அப்படத்திற்குப் பிறகு 'த புல்' படத்தை இயக்கி வந்தார்.