நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி |
மலையாளத்தில் கடந்த பிப்ரவரியில் ஒவ்வொரு வாரமும் வெளியான படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி படங்களாக மாறின. அதிலும் பெரிய முன்னணி நட்சத்திரங்கள் யாரும் இல்லாத நிலையில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் கேரளாவை போலவே தமிழகத் திரையரங்குகளிலும் வெளியாகி அதே அளவு வரவேற்பு மற்றும் வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பொங்கல் ரிலீஸுக்கு பிறகு ரசிகர்கள் கூட்டத்திற்காக காத்துக் கிடந்த தமிழக திரையரங்குகளுக்கு கோடையில் பெய்த மழையாக இந்த படம் மாறி உள்ளது.
இந்த படம் மலையாளத்தில் வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்பு 'பிரேமலு' என்கிற படம் வெளியானது. காதல் கதையாக அதேசமயம் வித்தியாசமான கோணத்தில் உருவாகி இருந்த இந்த படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது. இதைத்தொடர்ந்து தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இயக்குனர் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா மூலமாக கடந்த வாரம் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப்பட்டது.
அங்கேயும் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தமிழிலும் இந்த படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றனவாம். வரும் தமிழ் புத்தாண்டிற்கு தான் தமிழில் பெரிய படங்கள் வெளியாகலாம் என்கிற நிலையில் 'பிரேமலு' படம் இந்த சமயத்தில் தமிழகத்தில் வெளியாகும்போது மலையாளம் மற்றும் தெலுங்கில் பெற்ற அதே வரவேற்பையும் வசூலையும் பெறும் என்கிற திட்டத்துடன் தான் இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.