Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அட…ஜுனியர் ஸ்ரீதேவியா இது…ஆச்சரியத்தில் ரசிகர்கள்

10 மார், 2024 - 04:41 IST
எழுத்தின் அளவு:
Ahh…its-Junior-Sridevi…fans-in-for-a-surprise

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவிலும் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி டீன் ஏஜ் வயதிலேயே மெச்சூர்டான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தனி ஆளுமையுடன் திகழ்ந்தவர்.

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்து இப்போது தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். ஜுனியர் என்டிஆர் ஜோடியாக 'தேவரா' படத்தில் நடித்து வரும் அவர் அடுத்து, ராம் சரணின் 16வது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ்ப் படங்கள் பக்கமும் வருவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.

மகளிர் தினத்தை முன்னிட்டு புடவையில் சில புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். வழக்கமாக கிளாமரான புகைப்படங்களையே அதிகம் பகிர்பவர் ஜான்வி. நேற்று புடவையில் அவர் எடுத்து பதிவிட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்தபோது அவரது அம்மா ஸ்ரீதேவியைப் பார்ப்பது போலவே இருந்தது. சிலர் ஜுனியர் ஸ்ரீதேவி என்றும் கூட கமெண்ட் செய்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சங்கத்திற்கு கமல் நிதியுதவி: விஷால் நன்றிநடிகர் சங்கத்திற்கு கமல் நிதியுதவி: ... 'தாதா சாகேப் பால்கே விருது' பற்றி செல்வராகவன் திடீர் பதிவு 'தாதா சாகேப் பால்கே விருது' பற்றி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

RAJ - dammam,சவுதி அரேபியா
14 மார், 2024 - 07:03 Report Abuse
RAJ மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11 மார், 2024 - 04:03 Report Abuse
Mani . V நிறைய இடம் இருக்குன்னு யாராவது போஸ்டரை ஒட்டி விடப் போகிறார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)