Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல் முறையாக யுவன் இசையில் பாடும் விஜய்!

10 மார், 2024 - 12:42 IST
எழுத்தின் அளவு:
Vijay-sings-Yuvan-music-for-the-first-time!


நடிகர் விஜய் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் என பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியுள்ளார் . ஆனால், யுவன் சங்கர் ராஜா இசையில் இதுவரை விஜய் எந்த பாடலையும் பாடவில்லை. அதேபோல் யுவன் சங்கர் ராஜா விஜய் நடித்த 'புதிய கீதை' படத்திற்கு மட்டும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்' படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் படத்திற்கு இசையமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இதில் முதல் முறையாக யுவன் இசையில் விஜய் பாடல் ஒன்றை பாடியுள்ளதாக இன்று பெங்களூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் யுவன் சங்கர் ராஜா பகிர்ந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கும் பரத்!மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கும் ... ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மாட்டேன்: நிகிலா சங்கர் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)